×

திருப்பதி மலைப்பாதையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே நடந்து சென்ற லட்ஷிதா(6) என்ற சிறுமி நேற்று திடிரென காணாமல் போன நிலையில், காயங்களுடன் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை தாக்கி, இழுத்து சென்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலைப்பாதையில் பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

The post திருப்பதி மலைப்பாதையில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு! appeared first on Dinakaran.

Tags : tirppati ,Tirupati ,Latshita ,Lakshmi Narasimma Swami Sannati ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...